யூடியூபர் மாரிதாஸ் கைது - அதிமுக கடும் கண்டனம்
சென்னை, 08 ஜூன் (ஹி.ச.) யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அதிமுக தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் தமிழக அரசை விமர்சித்துள்ளது. அந்த பதிவில், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக, மாரிதாஸ் ம
மாரிதாஸ்


சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அதிமுக தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் தமிழக அரசை விமர்சித்துள்ளது.

அந்த பதிவில், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக, மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது ஜனநாயக விரோதமான செயல் என தெரிவித்துள்ளது.

மேலும், அவர் கூறிய கருத்துகளில் தவறு இருப்பதாக அரசு கருதியிருந்தால், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், விசாரணைக்காக முறையான நோட்டீஸ் வழங்கியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் அவரது உறவினர் தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டதாக கூறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மாரிதாஸ் கருத்து தெரிவித்ததாகவும், அதற்காக கைது நடவடிக்கையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.

மாரிதாஸ் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஜனநாயக குரல்களை ஒடுக்க முயல்வது கண்டனத்திற்குரியது என்றும் அதிமுக தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P