பதநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்?
திருநெல்வேலி, 08 ஜூன் (ஹி.ச.) பதநீர் என்பது பனை மரத்தின் பூம்பாளையிலிருந்து வடியும் இனிப்பான, இயற்கையான, மற்றும் ஆல்கஹால் அற்ற ஒரு அற்புத ஊட்டச்சத்து பானமாகும். இது உடலுக்கு உடனடி ஆற்றலையும், எண்ணற்ற மருத்துவ குணங்களையும் தரக்கூடியது. இதிலடங்கி
க


திருநெல்வேலி, 08 ஜூன் (ஹி.ச.)

பதநீர் என்பது பனை மரத்தின் பூம்பாளையிலிருந்து வடியும் இனிப்பான, இயற்கையான, மற்றும் ஆல்கஹால் அற்ற ஒரு அற்புத ஊட்டச்சத்து பானமாகும்.

இது உடலுக்கு உடனடி ஆற்றலையும், எண்ணற்ற மருத்துவ குணங்களையும் தரக்கூடியது.

இதிலடங்கியுள்ள சில வகை கூட்டுப்பொருட்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்டவையாகும்.

அவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நல்ல ஆரோக்கியம் தரும்.

பதநீரிலுள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்கள் எலும்புகளுக்கு வலுவும் ஆரோக்கியமும் தருகின்றன.

வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்திற்கு ஆரோக்கியமும் இயற்கையான பளபளப்பும் தருவதோடு, வயதான தோற்றம் வருவதையும் தடுக்கின்றன.

இதிலுள்ள வைட்டமின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த ஊக்கம் தரும் பானம் இது.

சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வலி போன்றவற்றை குணமாக்கும்.

உடனடி சக்தி:

இதில் உள்ள இயற்கையான குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் சர்க்கரைகள் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகின்றன.

எலும்பு மற்றும் பற்கள் பலம்:

பதநீரில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகள், பற்கள் மற்றும் நகங்கள் வலுவடைகின்றன.

வயிற்றுப் புண் மற்றும் வெப்பம் தணியும்:

வயிற்றுப் புண், தொண்டைப் புண், மற்றும் குடல் வெப்பத்தை (பித்தம்) குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு

சிறுநீரக ஆரோக்கியம்:

வெயில் காலத்தில் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றைத் தணித்து, சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்ய உதவுகிறது.

செரிமானம் மற்றும் மலச்சிக்கல்:

இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கிறது.

இரத்த சோகை குணமாகும்:

பதநீரில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ரத்தத்தை விருத்தி செய்து, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது.

சருமப் பளபளப்பு:

இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகின்றன.

பதநீரில் உள்ள சத்துக்கள்:

ஒரு குவளை (250 மிலி) பதநீரில் பின்வரும் சத்துக்கள் இயற்கையாகவே அடங்கியுள்ளன:

கால்சியம் (சுண்ணாம்புச் சத்து): 35.4 மி.கி.

இரும்புச்சத்து: 5.5

மி.கிபாசுபரசு: 32.4 மி.கிபுரதம் 49.7 மி.கிகலோரிகள் 113.3

பதநீர் குடிக்கும்போது கவனிக்க வேண்டியவை:

பதநீர் வடித்தவுடன் சில மணி நேரங்களிலேயே புளிக்கத் தொடங்கி கள்ளாக (மதுவாக) மாறிவிடும் என்பதால், இறக்கியவுடன் புதியதாகப் பருகுவதே சிறந்தது.பதநீரை நன்கு கொதிக்க வைத்து பாகு (கருப்பட்டி) காய்ச்சியும் பயன்படுத்தலாம்

தென்னை மரங்களின் மலராத பாளைகளில் அரிவாளால் கீறி சாறு வடித்து இயற்கை முறையில் நொதிக்க வைக்காமல் நீரா தயாரிக்கப்படுகிறது.

தென்னை மரத்தில் இருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / Durai.J