மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
புதுடெல்லி, 08 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்ப தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும், சில இடங்கள் இடைத்தேர்தல் மூலம
Rajya sabha


புதுடெல்லி, 08 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்ப தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதில் பெரும்பாலான இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும், சில இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில், மயிலம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலக்கெடு இன்று நிறைவடைகிறது.

இதுவரை ஆளும் கூட்டணி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேறு வேட்பாளர்கள் களமிறங்காத பட்சத்தில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஜூன் 9-ஆம் தேதி பரிசீலிக்கப்படவுள்ளன.

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 11-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

போட்டி ஏற்பட்டால் ஜூன் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P