Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 08 ஜூன் (ஹி.ச.)
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மீன்பிடித்ததுக்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டு முன்வைத்து 12 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது
இந்த நிலையில் சிறை காவல் முடிந்து இன்று நீர் கொழும்பு நீதிமன்றத்தில் 12 மீனவர்களை ஆஜர்படுத்தப்பட்டதில் ஒன்பதாவது முறையாக மீனவர்களின் நீதிமன்ற காவலை வருகின்ற 16ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
மேலும் ஒன்பதாவது முறையாக நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதால் மீனவர் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தை உள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை சிறையில் உள்ள மீனர்களை விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதேபோல மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மே மாதம் 12ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து ஆறு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது
இந்த நிலையில் சிறை காவல் முடிந்து இன்று நீர் கொழும்பு நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தப்பட்டதில் மூன்றாவது முறையாக 6 மீனவர்களுக்கும் வருகின்ற 16ஆம் தேதி வரை சிறை காவலை நீட்டிப்பு செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதனை அடுத்து மீனவர்கள் ஆறு பேரையும் சிறைக்கு கொண்டு செல்ல உள்ளனர்
Hindusthan Samachar / ANANDHAN