Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச)
சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை கடந்த இரு நாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தை நிலவரப்படி, நேற்று வரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50-க்கு விற்பனையான கத்தரிக்காய் இன்று ஒரே நாளில் ரூபாய் 20 உயர்ந்து கிலோ ரூபாய் 70-க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், கேரட் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ரூபாய் 50-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட், இன்று ரூபாய் 30 அதிகரித்து ரூபாய் 80-க்கு விற்பனையாகிறது.
கேரட், கத்தரிக்காய் மட்டுமின்றி பாகற்காய், புடலங்காய், பச்சை மிளகாய், பட்டாணி, அவரைக்காய், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததும், போக்குவரத்து செலவு அதிகரித்ததுமே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விலை உயர்வால் சில்லறை சந்தைகளிலும் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வரும் நாட்களில் வரத்து சீரானால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b