Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த சிறப்பு பிரிவின் முதல் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இதில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலர்கள் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தனித்துவமான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு நிற தொப்பி மற்றும் கருப்பு நிற காலணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் கடந்த 29-ஆம் தேதி தொடங்கப்பட இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது நடைபெற உள்ள தொடக்க விழாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தனது பணிகளை தொடங்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P