Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.எஸ். பாலாஜி, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு மற்றும் மின்வெட்டு பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,
விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு உடன் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்ததாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறினார். உண்மையில் ஐந்து பேர் மட்டுமே இணைந்துள்ளதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், விசிக சார்பில் செயல்பட்டு வரும் வெளிச்சம் தொலைக்காட்சி, கட்சித் தொண்டர்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த தொலைக்காட்சி முழுமையாக பனையூர் பாபுவின் முதலீட்டில் நடத்தப்பட்டதாகவும், பின்னர் அதை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு தானமாக வழங்கியதாகவும் கூறியிருப்பது தவறான தகவல் என்றும் தெரிவித்தார்.
வெளிச்சம் தொலைக்காட்சியில் பனையூர் பாபுவின் பங்களிப்பு இருந்தது உண்மைதான் என்றும், ஆனால் அதன் அளவு என்ன என்பது குறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் செயல்பாடுகள் மேலும் மெருகேற்றப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும், குறிப்பாக சட்டம்-ஒழுங்கு மற்றும் மின்வெட்டு பிரச்சனைகளில் கூடுதல் தீவிரத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் தனது அரசியல் அணுகுமுறையை முதலமைச்சர் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முயற்சிகளின் பின்னணியில் பாஜக இருப்பதைப் போலவே அவரது அரசியல் செயல்பாடுகள் இருப்பதாகவும் எஸ்.எஸ். பாலாஜி கருத்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ