தொடர் மழை எதிரொலி - குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, மெயின் அருவியில் குளிக்க தடை
தென்காசி, 08 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் சாரல் மழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்த அதிகரித்து காண
Courtallam Falls


தென்காசி, 08 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் சாரல் மழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்த அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணி காரணமாக முன்னதாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதன் காரணமாக பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN