Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு, 01 ஜூலை (ஹி.ச.)
தென் காஷ்மீரின் இமயமலையில் சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கான யாத்திரை, இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிகப் பயணங்களில் ஒன்றாகும்.
இயற்கையாக உருவாகும் பனி சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆண்டு 57 நாட்கள் நடைபெறும் யாத்திரை,
ஜூலை 3-ம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கி.மீ நீளமுள்ள நுன்வான்-பஹல்காம் வழித்தடம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ நீளமுள்ள பால்டால் வழித்தடம் ஆகிய இரு வழிகளிலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது.
அந்த வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஜம்முவில் உள்ள தாவி நதிக்கரை முகாமில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அங்கு உடனடி முன்பதிவு நடைபெற்று வருகிறது. யாத்ரிகர்களின் சீரான பயணத்தை உறுதி செய்ய அமர்நாத் ஆலய வாரியம் போதிய பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதுவரை இணையதளம் அல்லது வங்கிகள் மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்கள் இன்று நேரடி பதிவுக்காக முகாமிற்கு வந்தனர்.
பதிவுக்காக காத்திருந்த பலரும் புனித குகைக் கோயிலுக்குச் செல்லும் யாத்திரை குறித்து மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். யாத்திரை வழித்தடங்களில் பயங்கரவாதத் தடுப்பு ஒத்திகைகளை நடத்தி, பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீநகரில், பதான் சவுக் அடிவார முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ், ஸ்ரீ பிரேம் கார்க் பவனில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் துணை ராணுவப் படையினரும் பயங்கரவாதத் தடுப்பு ஒத்திகையை நடத்தினர்.
ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 28-ம் தேதி யாத்திரை நிறைவடையும்.
Hindusthan Samachar / vidya.b