அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு - 18 பேர் தொடர்ந்து சிகிச்சை
சென்னை, 01 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்கா
அம்மோனியா கசிவு


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்கா (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா, அசாம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

தற்போது, பல்வேறு மருத்துவமனைகளில் மொத்தம் 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

இந்த அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam