பவான் கல்யாண் குறித்து அவதூறு கருத்து – யூடியூபர் ராவண் கைது
ஹைதராபாத் , 01 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகக் கூறப்படும் யூடியூபர் ராவணை பிதாபுரம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ப
A


ஹைதராபாத் , 01 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகக் கூறப்படும் யூடியூபர் ராவணை பிதாபுரம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

ஏலூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர் நடேண்ட்லா மனோஹர்

குறித்து ராவண் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக பிதாபுரத்தைச் சேர்ந்த ஜனசேனா தலைவர் போஜ்ஜா குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் ராவண் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஹைதராபாத்தில் இருந்த ராவணை போலீசார் கைது செய்து பிதாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் கடந்த கால நிகழ்வுகளிலும் அவர் இதேபோன்று கருத்துகள் தெரிவித்துள்ளதாக கூறி போலீசார் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

விசாரணை முடிவடைந்த பின்னர் ராவணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA