Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
புகழ்பெற்ற மருத்துவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான மருத்துவர் பிதான் சந்திர ராயின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளான ஜூலை 01 ஆம் தேதி மருத்துவர்களின் அரும் பணியை போற்றும் வகையில் மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தங்கள் சுயநலனை பார்க்காமல், நோயாளிகளின் துயர் துடைக்க இரவு, பகலாக உழைக்கும் மாமனிதர்களை கவுரவிக்கும் விதமாகவே தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b