சென்னையில் வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.172.50 குறைவு- இன்று முதல் புதிய விலை அமல்
சென்னை, 01 ஜூலை (ஹி.ச.) சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை இன்று (ஜூலை 1) முதல் ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு வணிக சிலிண்டர் ரூ.3,106க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதத் தொடக்கத்
சிலிண்டர்


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை இன்று (ஜூலை 1) முதல் ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு வணிக சிலிண்டர் ரூ.3,106க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மறுஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, ஜூலை மாதத்திற்கான விலை மாற்றத்தில் வணிக சிலிண்டர் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக மேற்காசிய பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் வணிக எல்பிஜி சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் குறைந்து, விநியோக நிலைமை சீரடைந்துள்ளதன் எதிரொலியாக வணிக சிலிண்டர் விலையில் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் வழக்கம்போல் ரூ.928.50 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P