குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது - வேலை நாட்களிலும் குவியும் பயணிகள்
தென்காசி, 01 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பய
Old courtallam falls


தென்காசி, 01 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து சீராக உள்ள நிலையில், அனைத்து அருவிகளுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வேலை நாட்களான இன்றும் கூட சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது குற்றாலத்தில் சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தற்போது தென்காசி மாவட்டத்தில் இதமான சூழல் நிலவி வரும் நிலையில் சாரல் மழையில் நனைந்தபடி குற்றாலத்தில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து ஆனந்த குளியல் போட்டு வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் குற்றாலமானது களைகட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN