மணல் திருட்டு தடுப்பு விவகாரம் – திமுக நிர்வாகி தங்கமாங்கனி கைது
விருதுநகர், 01 ஜூலை (ஹி.ச.) சமீபத்தில் விருதுநகர் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கார்த்திக் நேரில் சென்று தடுக்க முயன்றார். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகி தங்கமாங்கனி, எம்.எல்.ஏ கார
மணல் திருட்டு தடுப்பு விவகாரம் – திமுக நிர்வாகி தங்கமாங்கனி கைது


விருதுநகர், 01 ஜூலை (ஹி.ச.)

சமீபத்தில் விருதுநகர் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கார்த்திக் நேரில் சென்று தடுக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகி தங்கமாங்கனி, எம்.எல்.ஏ கார்த்திக்கை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.காரசாரமான வாக்குவாதம் தொடர்பான காணொளிக் காட்சி இணையத்தில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். தாமரைக்கனியின் மகனான தங்கமாங்கனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவான அவரை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் பதுங்கி இருந்த தங்கமாங்கனியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை விருதுநகர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் திருட்டு தடுப்பு நடவடிக்கையின்போது எம்.எல்.ஏ.வை அவமதித்த விவகாரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b