தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி மருத்துவர்களுக்கு சீமான் வாழ்த்து
தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.) தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி, மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப்
சீமான்


தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.)

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி, மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

உடலையும் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு, பகல் பாராது மக்களின் உயிரைக் காக்கவும், நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்தவும் உலகம் முழுவதும் அரும்பாடாற்றும் மருத்துவர்கள் மிகுந்த போற்றுதலுக்குரியவர்கள் என்றும், வணங்கத்தக்கவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் மருத்துவச் சிகிச்சை அளித்து உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாலேயே அவர்களை உலகம் கடவுளுக்கு நிகராக மதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித வடிவில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் நாள் நல்வாழ்த்துகளை சீமான் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam