Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 01 ஜூலை (ஹி.ச)
கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே குச்சிப்பாளையத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கடந்த ஜூன் 29ஆம் தேதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென நாட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், முறையான அனுமதியின்றி நாட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விபத்துக்கு காரணமான நான்கு பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் திருவிழாக்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க கோயில் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b