Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று சம்மன் அனுப்பினர்.
அதன்படி இன்று காலை அவர் அதிகாரிகள் முன்பு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
அரசுப் பணிக்கு ஆசைப்பட்டு பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / vidya.b