Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 01 ஜூலை (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணை நீர்மட்டம், 50 அடியாக உள்ளதால், கடந்த ஒரு மாதமாக அணை நீர்த்தேக்கப் பகுதியில், 75 சதவீதம் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன.
ஏற்கனவே கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் பேக்டரி கழிவுகளால் தண்ணீர் முற்றிலும் மாசடைந்து பச்சை நிறமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், தற்போது வளர்ந்துள்ள ஆகாயத் தாமரையால் தண்ணீர் முற்றிலும் மாசடைந்துள்ளது.
இந்த மாதம் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில், அணை பகுதியில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரையை உடனே அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN