Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்க முடியாதது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தங்களது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தவெக, தற்போது ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படுவது முரண்பாடான நிலைப்பாடு என விமர்சித்துள்ளார்.
மேலும், சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படும் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அரசு செயல்படுவது, தென் மாவட்ட மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அணுக்கனிம சுரங்கத் திட்டம் தொடர்பாக தவெக அரசு கடைப்பிடித்து வரும் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யப்படும் பெரும் துரோகமாகும் என்றும் கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ