Enter your Email Address to subscribe to our newsletters

மங்களூரு, 01 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் மங்களூரு
நகோரி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று நள்ளிரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் குடியிருப்பு பகுதியிலிருந்த ஒரு வீடு திடீரென இடிந்து தரைமட்டமானது.
இந்த வீட்டில் வசித்து வந்த 6 பேர் கொண்ட ஒரே குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணியின் போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் சாந்தா (46), அவரது மகள்கள் அனாமிகா (8), பாரி (4) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மழை தொடரும் நிலையில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA