Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 ஜூலை (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி (32) என்ற பெண்
இயற்கை உபாதை கழிக்கச் சென்றதாகக் கூறப்படும் செந்தமிழ்செல்வி, ஆடைகளின்றி, கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் பல்வேறு காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொடூரக் கொலை சம்பவம் சிறுகளப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam