Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்து பிரசாந்த் பாண்டியராஜ் வழங்கும் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்
இயக்கத்தில்
ஜியோ ஹாட்ஸ்டார் (ஓ.டி.டி) தளத்தில் வெளிவந்த வெப் சீரிஸ் லிங்கம்
இந்த வெப் சீரிஸில் கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட், சத்யா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்த லிங்கம் என்ற ஒரு சாமானியன் எப்படி சூழ்நிலைகளால் நிழல் தாதாவாக மாறினான் என்ற உண்மை சம்பவத்தை பேசும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் 'லிங்கம்'
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கம் (கதிர்) ஒரு திறமையான கபடி வீரர்.
காவல்துறை அதிகாரியாகி ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவரது லட்சியம்.
ஆனால், எதிர்பாராத ஒரு அசம்பாவிதமும், பழிவாங்கலும் அவரது கனவைச் சிதைக்கிறது.
செய்யாத கொலைக் குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் லிங்கம், அங்கு சந்திக்கும் காவல்துறை சித்திரவதைகளாலும் அவமானங்களாலும் முற்றிலுமாக மாறுகிறார்.
சிறையிலிருந்து வெளிவரும் லிங்கம், சாமியப்பன் மற்றும் செல்லப்பாண்டியன் ஆகியோரின் சட்டவிரோத மது வியாபார நெட்வொர்க்கிற்குள் நுழைகிறார்.
இறுதியில், சூழ்நிலைகளின் அழுத்தத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தையே தன் கட்டுக்குள் வைக்கும் நிழல் தாதாவாக மாறுகிறார் லிங்கம்.
ஒரு சாதாரண மனிதனாக வாழ விரும்பும் கதாநாயகன், சூழ்நிலைகளால் வன்முறை மற்றும் அதிகார அரசியலின் மையத்திற்குள் இழுக்கப்பட்ட பின்னர்நடக்கும் சம்பவங்களே இந்த தொடரின் கதை.
லிங்கம் கதாபாத்திரத்தில் நடிக்கும் (கதிர்)முரட்டுத்தனமான கேங்க்ஸ்டராக மாறும் பாத்திரத்தில் கதிர் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது உடல்மொழி மற்றும் கண்கள் காட்டும் ஆக்ரோஷம் தொடருக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.
திவ்யா பாரதி,பூர்ணிமா ரவி பொன்மலர் கதாபாத்திரத்தில் வரும் திவ்யா பாரதி மற்றும் பூர்ணிமா ரவி தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நேர்த்தியாகச் செய்துள்ளனர்.
போஸ் வெங்கட் மற்றும் பிற நடிகர்கள் வில்லத்தனம் மற்றும் நெகட்டிவ் பாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தென் தமிழகத்தின் மண் வாசனை மாறாத எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
தென் தமிழகத்தின் ரவுடியிசம், அரசியல் மற்றும் போலீஸ் அராஜகம் ஆகியவற்றை எந்தப் பூச்சுமின்றிக் பார்வையாளர்களின் கண்முன்னே நிறுத்தியுள்ளார்,இயக்குனர் லட்சுமி சரவணகுமார்.
காட்சிகளுக்கு ஏற்றவாறு சிறப்பாக பின்னணி இசை அமைத்துள்ளார்,நிவாஸ் கே.
கடலோரப் பகுதியின் தீவிரத்தன்மையை அப்படியே நம் கண்முன்னே நிறுத்தியுள்ளது தினேஷ் குமார் மற்றும் புருஷோத்தமன் கேமரா கண்கள்.
சில இடங்களில் வழக்கமான கேங்க்ஸ்டர் கதைகளின் சாயல் தெரிந்தாலும், ஒவ்வொரு எபிசோடும் புதிதாக ஒரு மர்மத்தை அறிமுகப்படுத்துவதால், அடுத்த பகுதியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு வருகிறது.
மொத்தத்தில் கிரைம்–திரில்லர் ரசிகர்கள் தவறவிடக் கூடாத ஒரு உண்மை சம்பவத்தின் படைப்பு லிங்கம்
மதிப்பீடு: 3.75 / 5 ⭐
Hindusthan Samachar / Durai.J