காதலர்கள் இறந்த விவகாரம் - கைது செய்யப்பட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
மயிலாடுதுறை, 01 ஜூலை (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமமாக நேற்று காலை மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, புதுப்பாளையத்தைச் சேர்ந்த காதலன் 19 வயது பார்த்திபன் இறப்பதற்கு முன் 29ஆ
Mayiladuthurai


மயிலாடுதுறை, 01 ஜூலை (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமமாக நேற்று காலை மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, புதுப்பாளையத்தைச் சேர்ந்த காதலன் 19 வயது பார்த்திபன் இறப்பதற்கு முன் 29ஆம் தேதி இரவு காதலியின் தந்தை மற்றும் உறவினர்கள் நான்கு பேர் தன்னை ஜாதிப் பெயரை சொல்லி தாக்கியதாக புகார் அளித்ததன் பேரில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் பொறையார் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஐந்து பேரையும் பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டது.

சிறுமியின் தந்தை தன் மகளை காணவில்லை என்று அளித்த புகாரில் சிறுமி மாயமானதாக வழக்குப்பதிவும், சாத்தங்குடி விஏஓ அளித்த புகாரில் காதலர்கள் தூக்கிட்டு இறந்த சம்பவத்திற்கு இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பெண்ணின் குடும்பத்தார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இறந்த பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனை செய்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பார்த்திபனின் உடலை வாங்க செல்லாமல் இறந்த பார்த்திபனின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தீர்வு எட்டப்படாததால் சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இரவு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல் மயிலாடுதுறையில் மின் தகன கூடத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதில் பங்கேற்ற சிறுமியின் தந்தை லட்சுமி காந்தனை போலீசார் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து விசாரணையின் முடிவில் இறந்த பார்த்திபன் அளித்த புகாருக்கான வழக்கில் லட்சுமி காந்தனின் உறவினர்களான சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார், ஆகிய நான்கு பேரை பொறையார் போலீசார் கைது செய்து மயிலாடுதுறை குற்றவியல் அமர்வு 1 நீதிபதி லோகநாதன் முன்பு ஆஜர் படுத்தினர்.

நால்வரையும் கடலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் 15 நாள் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நால்வரையும் கடலூருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN