தேசிய மருத்துவர் தினம் - மருத்துவர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் வாழ்த்து
சென்னை, 01 ஜூலை (ஹி.ச) தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளிய
TVK Arunraj


Hh


சென்னை, 01 ஜூலை (ஹி.ச)

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை நிபுணத்துவம் தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நோயாளிகளின் உயிரைக் காக்கவும், சமூக நலனை மேம்படுத்தவும் இரவு பகல் பாராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், ஒரு மருத்துவராகவும், சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ