எம்.எல்.ஏ. பேரம் விவகாரம் -திமுக மீது தமிழக வெற்றி கழகம் கடும் குற்றச்சாட்டு
தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.) தவெக எம்.எல்.ஏ. ஒருவரிடம் கோடிக்கணக்கில் பேரம் பேச முயற்சி நடைபெற்றதாகக் கூறி, அதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக வெற்றி கழகம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
தவெக


தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.)

தவெக எம்.எல்.ஏ. ஒருவரிடம் கோடிக்கணக்கில் பேரம் பேச முயற்சி நடைபெற்றதாகக் கூறி, அதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக வெற்றி கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

தமிழகத்தில் ஆட்சி அமைந்தது முதல் அதனை கவிழ்க்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தவெக எம்.எல்.ஏ. ஒருவரிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்ட விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளதாகவும், இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த பேரத்திற்கு பின்னணியில் ஒரு அரசியல் சக்தி செயல்பட்டதாகவும், அதன் தொடர்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும் தவெக குற்றம்சாட்டியுள்ளது.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக திமுக நடத்துவதாகக் கூறப்படும் அரசியல் நடவடிக்கைகளை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும், இதுபோன்ற முயற்சிகளுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தமிழக வெற்றி கழகம் தனது பதிவில் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P