Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.)
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஒரே நேரத்தில் சிறுதானியம் விதைக்கவும் மற்றும் களையெடுக்கவும் பயன்படும் பல்துறை நவீன எந்திரமானது
வறட்சி மற்றும் ஆள் பற்றாக்குறை தீர்க்க இந்த கருவி உபயோகப்படுகிறது.
வறட்சியான மானாவாரி நிலங்களில் சிறுதானிய சாகுபடியை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த எந்திரம் உதவுகிறது
பழைய மோட்டார் சைக்கிளின் பாகங்கள் பழைய மோட்டார் சைக்கிளின் 2 சக்கரங்கள், என்ஜின், பெட்ரோல் டேங்க், காலால் மிதித்து ஸ்டார்ட் செய்யும் ஸ்டாட்டர் இவற்றுடன், தானியங்களை நிரப்பி வைக்க பிளாஸ்டிக்கால் ஆன டப்பா, தானியங்களை விதைக்க சல்லடை, தானியங்கள் சீராக நிலத்தில் விழும் வகையில் கட்டுப்பாட்டு கருவி, எந்திரத்தின் வேகத்தை கட்டுபடுத்த கருவி, நிலத்தை பண்படுத்த அதாவது உழுவதற்கு சிறிய கலப்பை ஆகியவற்றை பொருத்தி, விதைப்பு மற்றும் விளைநிலத்தை உழுது பண்படுத்த இந்த இயந்திரம் உதவுகிறது.
பொதுவாக சிறுதானியங்கள் விதைக்கும்போது ஒருவர் முன்னால் விதைகளை விதைத்தபடி செல்வார்.
பின்னால் டிராக்டர் மூலம் ஒருவர் உழுது கொண்டே செல்வார்.
ஆனால் இந்த எந்திரத்தை ஒருவர் மட்டும் இயக்கினால் போதும். விதைகளை அதுவே விதைத்து, உழுது விடும்.
டிராக்டர் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் தானியங்கள் விதைக்க சுமார் ஒரு மணி நேரமாகும்.
அதற்கு ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இந்த விதைப்பு எந்திரத்தில் ஒன்று அல்லது 2 லிட்டர் பெட்ரோல் (ரூ.200 வரை மட்டுமே) ஊற்றினாலே போதும். டிராக்டர் விதைப்பு போலவே, இதுவும் 1 மணி நேரம் முதல் 1 மணி நேரத்துக்குள் பணிகளை மிக நேர்த்தியாக முடித்துவிடும்.
குறைந்த செலவில் சிறுதானிய விதைப்பு பணிகளை செய்வதுடன், விதைப்புக்கு முன்னதாக நிலத்தை பண்படுத்தவும் இந்த கருவியை பயன்படுத்தலாம்.
விதைப்பு எந்திரத்தில் முதலில் டேங்கில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்பு தானியங்கள் சேகரிக்கும் டப்பாவில் தானியங்களை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். எந்திரத்தை ஸ்டார்ட் செய்து விட்டு எந்த வேகத்தில் இயக்க வேண்டுமோ அந்த வேகத்தில் அதனை இயக்கலாம். அதற்காக பிரத்யேகமான கருவி ஒன்று வலது கைப்பிடி அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
எந்திரம் இயங்க தொடங்கியவுடன் விதைகள் சீராக விழும் வகையில் உள்ளது. பின்னால் கலப்பை உழுது கொண்டே செல்லும். இந்த எந்திரம் விதைகளை விதைப்பது பார்க்க அவ்வளவு அழகாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b