Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறப்பு மற்றும் இறப்பு நினைவேந்தலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் திக்னம், நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இரக்கம் மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,
மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் National Doctors Day-இல் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.
NEET போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN