மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
சென்னை, 01 ஜூலை (ஹி.ச.) தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி, மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக
அன்புமணி


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி, மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

உயிர்களைக் காக்கும் மருத்துவர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள் என்றும், அவர்களின் சேவை மகத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவராகப் பணியாற்றி பின்னர் மேற்கு வங்க மாநில முதலமைச்சராக உயர்ந்த டாக்டர் பி.சி. ராய் பிறந்த நாளே தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுவதாகவும், இந்த நாளில் அனைத்து மருத்துவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மனித உயிர்களைக் காக்கும் புனிதப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P