பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் இன்று முதல் உயர்வு- புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்தன
புதுடெல்லி, 01 ஜூலை (ஹி.ச.) வெளிநாடு செல்ல பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் இன்று (ஜூலை 1) முதல் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கட
பாஸ்போர்ட்


புதுடெல்லி, 01 ஜூலை (ஹி.ச.)

வெளிநாடு செல்ல பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் இன்று (ஜூலை 1) முதல் உயர்த்தப்பட்டுள்ளன.

புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டண விவரங்களின்படி,

18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 15 முதல் 18 வயது வரையிலானோருக்கு 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் முறைக்கான கட்டணம் ரூ.6,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, 36 பக்கங்கள் கொண்ட மாற்று பாஸ்போர்ட்டை சாதாரண முறையில் பெற ரூ.5,000 மற்றும் தட்கல் முறையில் பெற ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், 60 பக்கங்கள் கொண்ட மாற்று பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் ரூ.6,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.8,500 செலுத்த வேண்டும்.

18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க சாதாரண முறையில் ரூ.1,750 மற்றும் தட்கல் முறையில் ரூ.4,250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறார்களின் பாஸ்போர்ட் தொலைந்து போனால், மாற்று பாஸ்போர்ட் பெற சாதாரண முறையில் ரூ.4,250 மற்றும் தட்கல் முறையில் ரூ.6,750 கட்டணம் செலுத்த வேண்டும்.

புதிய கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று முதல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்போர் திருத்தப்பட்ட கட்டணத்தையே செலுத்த வேண்டும்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P