Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.)
சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான புவியரசு மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் கவிதைகள் மற்றும் உலக இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்திற்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர் புவியரசு எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், 'கையொப்பம்' கவிதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதையும், 'புரட்சிக்காரன்' மொழிபெயர்ப்பு நூலுக்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதையும் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புவியரசின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
மேலும், கவிஞர் புவியரசின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P