Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 01 ஜூலை (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வனத்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கீழக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப் போது கீழக்கரையை அடுத்த செங்கல் நீரோடை கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
540 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதனுடைய மதிப்பு ரூ 20 லட்சம் இருக்கும் என்று கூறினர்.
540 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் மற்றும் கடல் அட்டை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவர்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN