பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
சென்னை, 01 ஜூலை (ஹி.ச) 2026-27ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 1-ஆம் தேதி) வெளியிடப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு


சென்னை, 01 ஜூலை (ஹி.ச)

2026-27ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று

(ஜூலை 1-ஆம் தேதி) வெளியிடப்படுகிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியல், மாணவர்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இதில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை. துறைசார் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இந்த ஆண்டு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

தரவரிசைப் பட்டியல் வெளியான பிறகு மாணவர்கள் www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் மூலம் தரவரிசையை அறிந்துகொள்ளலாம்.

தரவரிசை வெளியீட்டைத் தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தரவரிசையில் குறைபாடு இருப்பின், மாணவர்கள் குறைதீர் முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுமார் 1.5 லட்சம் இடங்கள் மாணவர் சேர்க்கைக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b