டிஜிட்டல் கைது விவகாரத்தில் ரூ.7.22 லட்சம் மோசடி - மேற்கு வங்கத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்கம், 01 ஜூலை (ஹி.ச) தொடர்ச்சியாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் வைத்து, தான் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டிருப்பதாக பொய்யாகக் கூறி, மோசடிக்காரர்கள் தன்னிடம் ரூ.7.22 லட்சம் பறித்ததாக ஒரு பெண் புகார் அளித்திருந்தார். புகாரைத் தொடர்ந்து, ட
Rs 7.22 lakh fraud in 'digital arrest' scam


மேற்கு வங்கம், 01 ஜூலை (ஹி.ச)

தொடர்ச்சியாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் வைத்து, தான் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டிருப்பதாக பொய்யாகக் கூறி, மோசடிக்காரர்கள் தன்னிடம் ரூ.7.22 லட்சம் பறித்ததாக ஒரு பெண் புகார் அளித்திருந்தார்.

புகாரைத் தொடர்ந்து, டெல்லி சைபர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

விசாரணையில், வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை விவரங்களை போலீசார் ஆய்வு செய்ததில், மோசடி செய்யப்பட்ட தொகை முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னர் பல கணக்குகள் வழியாக பகிர்ந்தளிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், இத்தகைய மோசடிகளை நடத்துவதற்காக குற்றவாளிகள் சைபர் குற்றவாளிகளுக்கு மியூல் வங்கிக் கணக்குகள், சிம் கார்டுகள் மற்றும் வங்கி விவரங்களை வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில், டெல்லி போலீசார் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் ஹவுரா மாவட்டங்களில் சோதனை நடத்தி, சமிரன் ராய், பிரின்ஸ் ஷா மற்றும் சமர் சாட்டர்ஜி ஆகிய மூவரையும் இன்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 6 மொபைல் போன்கள், ஒரு மடிக்கணினி, 18 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், 15 சிம் கார்டுகள் மற்றும் பல்வேறு வங்கி ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சைபர் மோசடி மூலம் கிடைத்த பணத்தை மாற்றி பல அடுக்குகளாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மியூல் வங்கிக் கணக்குகளை வழங்கும் கும்பலின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டவர்கள் இருந்ததாகவும், ஆரம்பகட்ட விசாரணையில் சர்வதேச சைபர் மோசடி கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b