நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பு விவகாரம் - வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை, 01 ஜூலை (ஹி.ச.) தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்த தீர்மானத்தை எதிர்த்து சங்க உறுப்பினர் நம்பிராஜன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. நடிகர் சங்கத்தின்
Actor


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்த தீர்மானத்தை எதிர்த்து சங்க உறுப்பினர் நம்பிராஜன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பு தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து நம்பிராஜன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி, சங்க உறுப்பினர் எஸ்.ஆர். சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மரியா கிளாட் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய எஸ்.ஆர். சேகரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, நம்பிராஜன் தொடர்ந்துள்ள பிரதான வழக்கின் விசாரணை தொடரலாம் என்று உத்தரவிட்டார்.

இதன் மூலம் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்கால நீட்டிப்பு தொடர்பான சட்டப்பூர்வ விவகாரம் குறித்து உயர்நீதிமன்றத்தில் விரிவான விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ