Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பரங்குன்றம், 01 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டகுதிரை குத்தி குசுவன் குண்டு, இராமன் குளம், கிளா நேரி, இலந்தை குளம்,தின்னா நேரி, கோணபட்டி, ஆகிய ஏழு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காலை மாலை ஆகிய இரு வேலைகளில் முறையாக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தற்று உள்ள சோழமுரிணி கிராமத்திற்கு சென்று பஸ் ஏறி பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் மாலை நேரங்களில் பேருந்து வராத காரணத்தால் இரவு 7 மணிக்கு மேல் வருவதால் பாதுகாப்பின்மை சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஒரு வருடமாக 56 குதிரை குத்தி பேருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வரும் பேருந்தில் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்தில் இடமில்லாத காரணத்தினால் செல்ல முடியாமல் தாமதம் ஏற்படுகிறது.
ஆகையால் முன்பு 56 குதிரை குத்து பேருந்து இயக்கி கிராம மக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பயனடையுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரியிடம் பல்வேறு முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து குதிரை குத்தி கிராம மக்கள் கழுவன் குளம்சாலையில் மறியல் செய்தனர் இரண்டு மணி நேரமாக நடைபெற்று வரும் சாலை மறியலில்போக்குவரத்து கழக அதிகாரிகளோ வருவாய் துறை அதிகாரிகளோ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.
இதனால் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பள்ளி மாணவி கலைச்செல்வம் கூறுகையில்,
காலை 7 மணிக்கு வர வேண்டிய பஸ் எட்டு மணிக்கு மேல் வந்து நாங்கள் பள்ளிக்கு செ பள்ளியில் 9:00 மணிக்கு மேல் செல்வதால்வெளியில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதேபோல் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பஸ் கிடைக்காமல் வீட்டுக்கு வர ஏழு மணி மேல் ஆகிறது அதனால் இருட்டில் நடந்து வர பயமாக உள்ளது உரிய நேரத்தில் பள்ளி செல்ல எங்களுக்கு பஸ் கிடைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்,என்றார்.
Hindusthan Samachar / vidya.b