தெலங்கானாவில் விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம்- முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
ஹைதராபாத் , 01 ஜூலை (ஹி.ச.) தெலங்கானா மாநிலத்தில் “விவசாய பஹரோசா” திட்டத்தின் கீழ் அடுத்த 9 நாட்களில் சுமார் ரூ.9,000 கோடி தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைப
A


ஹைதராபாத் , 01 ஜூலை (ஹி.ச.)

தெலங்கானா மாநிலத்தில் “விவசாய பஹரோசா” திட்டத்தின் கீழ் அடுத்த 9 நாட்களில் சுமார் ரூ.9,000 கோடி தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

வறட்சி மற்றும் மழை பற்றாக்குறை நிலவுவதால் அரசு பரிந்துரைக்கும் உயர் மகசூல் தரும் 7 வகை நெல் விதைகளை மட்டுமே விவசாயிகள் பயிரிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தேவையான விதைகள் அனைத்தும் விவசாய வட்டாரங்களில் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 30 மாதங்களில் விவசாய நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், இதுவரை 25.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், “விவசாய பஹரோசா” திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.36,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முந்தைய சந்திரசேகர ராவ்

தலைமையிலான பி.ஆர்.எஸ் ஆட்சியில் தெலங்கானா கடன் மாநிலமாக மாறியதாக குற்றம் சாட்டிய அவர், தற்போது அரசு மாதம் ரூ.6,000 கோடி வரை விவசாய நலத்துக்காக செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், பிஜேபி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி

குறித்து விமர்சனம் செய்த அவர், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், மூசி நதி அழகுபடுத்தல், பிராந்திய ரிங் ரோடு, மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை எந்த தடையும் இன்றி நிறைவேற்றுவோம் என முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி அளித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA