த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை
சென்னை, 01 ஜூலை (ஹி.ச.) தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையில், தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 1) மாலை சென்னை அருகே கோவளத்தில் நடைபெற உள்ளது. த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளின் தலைவர்
தவெக


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)

தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையில், தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 1) மாலை சென்னை அருகே கோவளத்தில் நடைபெற உள்ளது.

த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் புதிய அரசியல் அணிக்கான ஒருங்கிணைப்பு, கூட்டணியின் எதிர்கால செயல்திட்டம் மற்றும் பொதுக் கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தாங்கள் த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ கூட்டணிக் கட்சிகள் அல்ல என்பதாலும், கூட்டத்தில் பங்கேற்பது தவறான அரசியல் செய்தியை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam