ஆணவக்கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் - ஆளுர் ஷா நவாஸ்
சென்னை, 01 ஜூலை (ஹி.ச.) ஆணவக்கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவிசிகவைச் சேர்ந்த ஆளுர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றக் கோரி சட்டப்பேரவையில் விசிக சார்பில் வலிமைய
Aloor Shah Navas


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)

ஆணவக்கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவிசிகவைச் சேர்ந்த ஆளுர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றக் கோரி சட்டப்பேரவையில் விசிக சார்பில் வலிமையாகக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

கடந்த 18-03-2026 அன்று, தோழர் எவிடென்ஸ் கதிர் மற்றும் தோழர்களுடன் ஆணையத்தின் முன் ஆஜராகி, ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தின் தேவை குறித்த ஆவணங்களை அளித்தோம். மீண்டும் கடந்த வாரம்

(25-06-2026) (ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன்) ஆணையத்தை சந்தித்து முறையிட்டுள்ளோம்.

ஆணையத்தை நாங்கள் இருமுறை சந்தித்த இந்த 3 மாத இடைவெளியில், தமிழ்நாட்டில் 8 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன.

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதே உறுதியுடன் இப்போது தவெக அரசு, நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN