தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஊர்வலம் - பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
திருப்பத்தூர், 01 ஜூலை (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பூங்குளம் பகுதியில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் ராஜா பெருமாள் தலைமையில் விவசாயிகள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில
Vaniyambadi Protest


திருப்பத்தூர், 01 ஜூலை (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பூங்குளம் பகுதியில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் ராஜா பெருமாள் தலைமையில் விவசாயிகள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், கூட்டுறவு மற்றும் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் மதுபாட்டில்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தன்மை கொண்ட பாட்டில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல், பூங்குளம் வனப்பகுதியில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பனை விதைகளை நடவு செய்ய வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்ற விவசாயிகள், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / ANANDHAN