Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தனது அரசியல் பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அழைப்பில்,
கடந்த 35 ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் மக்களுக்காக பணியாற்றி வருவதாகவும், குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது கொரோனா பெருந்தொற்று காலத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், தனது பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் புதிய தொடக்கமாக, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, புதிய உத்வேகத்துடன் அரசியல் பயணத்தை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான மாபெரும் இணைப்பு விழா, ஜூலை 2 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல், Four Points by Sheraton Mahabalipuram Resort & Convention Center அரங்கில் நடைபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P