Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.)
டாக்டர் பிதான் சந்திர ராய்
(Dr. B. C. Roy) இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் ஆவார்.
மருத்துவர் பி.சி.ராய் 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார்.
இவரது வாழ்வும் சேவைகளும் இந்திய மருத்துவத் துறைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கிய அடித்தளமாக அமைந்தன.
இலவச மருத்துவம்: முதலமைச்சராக இருந்தபோதும், தினமும் காலையில் தனது இல்லத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தார்.
பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தார்.
இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமில்லாமல், சிறந்த மருத்துவராகவும் சேவை புரிந்துள்ளார்.
இந்தியாவில் இந்திய மருத்துவ சங்கம் (IMA) மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
1948 முதல் 1962 வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
நவீன வங்காளத்தின் சிற்பி:
பிரிவினைக்குப் பிந்தைய மேற்கு வங்காளத்தை மறுகட்டமைப்பு செய்து துர்காபூர், கல்யாணி உள்ளிட்ட ஐந்து புதிய நகரங்களை உருவாக்கினார்
பி.சி.ராய் தேசிய விருது: மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் மற்றும் அரசியல் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இவரது பெயரில் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
இவர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.
தனித்துவமான தேதி: இவர் ஜூலை 1, 1882 இல் பிறந்து, சரியாக தனது 80வது வயதில் ஜூலை 1, 1962 இல் இயற்கை எய்தினார்.
ஒரே தேதியில் பிறப்பும் இறப்பும் அமைந்த ஒரு சில உலகத் தலைவர்களில் இவரும் ஒருவர்.
Hindusthan Samachar / Durai.J