திமுக ஆட்சியில் இருந்ததை போல் தவெக ஆட்சியில் லஞ்சம் இருக்காது - அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை, 10 ஜூலை (ஹி.ச.) சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியின் 60-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வு மற்றும் இந்த ஆண்டு முதல் இருபாலர் கல்வி அறிமுக விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொ
Minister Vishwanathan


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)

சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியின் 60-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வு மற்றும் இந்த ஆண்டு முதல் இருபாலர் கல்வி அறிமுக விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், 10 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இன்று 30,000 பேரோடு செயல்படுகிறது என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். புரிந்து முறையாக அறிந்து கொள்கிற மனநிலைகளை கொண்டு இருக்க கூடிய பருவம் தான் கல்லூரி பருவம். இந்த கல்லூரியில் பேராசிரியர்கள் குறைவாக இருக்கிறார்கள். இங்கு பேராசிரியர்கள் பற்றாக்குறை சம்மந்தமாக விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கப்படும்.

தோல்வி என்பது முடிவல்ல. ஒரு தொடக்கத்தின் தொடக்கம். மாணவர்கள் கேள்விகளை பேராசிரியர்களிடம் எழுப்ப வேண்டும். கேள்வி கேட்கும் ஞானத்தை கற்றுக்கொள்ளுங்கள். மாணவர்கள் செல்போன்களை நேரத்தை வீணடிப்பதற்காக அல்லாமல், அறிவை வளர்த்துக் கொள்ளவும், திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில் அதிகமாக லஞ்சம் இருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் தலைமையில் லஞ்சம் முழுவதுமாக ஒழிக்கப்படும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதலமைச்சராக இருப்பார். அரசியல் தலைவர்கள் நேரம் பார்க்காமல் மக்களுக்காக உழைக்க வேண்டும். நான் தலைமைச் செயலகத்திற்கு வருவதற்கு முன்பே அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு இருப்பதை பலமுறை பார்த்துள்ளேன்.

மாணவர்கள் பேராசிரியர்களிடம் அதிகமாக கேள்விகள் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தங்களது குறைகளையும் திறமைகளையும் தாங்களே அறிந்து முன்னேற வேண்டும்.

போதைப்பொருள் மற்றும் கஞ்சா கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'சிங்கப்பெண்' சிறப்புப் படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் தங்களின் லட்சியங்களையும், கனவுகளையும் அடைய தொடர்ந்து உழையுங்கள். நிச்சயம் உங்களின் இலக்கை அடைவீர்கள், வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN