Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த சோதனையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பணமோசடி தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வரும் Dealers of Baby Products என்ற நிறுவனத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நிறுவனத்தின் நிதிப் பரிவர்த்தனை ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சோதனை நடைபெறும் இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனை எந்த வழக்கின் அடிப்படையில் நடைபெறுகிறது என்பது குறித்து அமலாக்கத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. சோதனை நிறைவடைந்த பிறகே முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam