Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த மனுவில், இந்த ஐந்து தொகுதிகளின் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை மேற்கண்ட ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர், முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் உள்ளிட்ட தரப்பினர் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ