Enter your Email Address to subscribe to our newsletters

கும்மிடிப்பூண்டி, 10 ஜூலை (ஹி.ச.)
கும்மிடிப்பூண்டி அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், லாரி ஓட்டுநர் பிரவீன்(வயது 22) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, லாரி ஓட்டுநரான பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரவீனை தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், அவரை கைது செய்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், வழக்கு தொடர்பாக மேல் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b