Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 10 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அவர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதுடன், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தின் அருகே அமைந்துள்ள 3 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை எளிதாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சரின் வருகையையொட்டி கரூர் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்திலும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P