Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 10 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசன் ஆனது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மெல்லிய சாரல் மழை துளிகள் பொழிந்தபடி உள்ளன.
இந்த நிலையில், மெல்லிய சாரலில் நனைந்தபடி அருவிகளில் குளிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து ஆனந்த குளியல் போட்டு வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, விடுமுறை நாட்கள், வேலை நாட்கள் என்று இல்லாமல் அனைத்து நாட்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளுமே களைகட்டி உள்ளது.
அதாவது, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மெல்லிய சாரலில் நனைத்தபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தங்களது குடும்பங்களுடன் ஆனந்த குளியல் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN