Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 10 ஜூலை (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பையூர் கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா விற்பனை செய்யப்படுவதாக திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து இன்று திடீரென கிராமத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்த நாராயணன் (50) என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் சுமார் 100 பாக்கெட்டுகள் என கொண்ட மூன்று மூட்டைகளில் 90 கிலோ எடையுள்ள குக்கா பான் மசாலா இருந்துள்ளது.
இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்து நாராயணனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது மருமகன் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவனூர் பகுதியை சேர்ந்த அசோக் பாரதி (33) என்பவர் குட்கா பான் மசாலாவை பெங்களூருவில் இருந்து எடுத்து வந்து விற்பனைக்காக தனது மாமனாரிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரையும் கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
மேலும் ஒரு லட்சம் மதிப்புள்ளான 90 கிலோ எடை கொண்ட குட்கா பான் மசாலாவையும் பறிமுதல் செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN