Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு காஷ்மீர், 10 ஜூலை (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க பாஜக உள்ளிட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்,
காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள், பாஜக, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் என மொத்தம் 52 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தப் போராட்டம் அரசியல் லாபத்திற்காக அல்ல,ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுடன், மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
அப்போது மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்ததாகக் கூறிய பரூக் அப்துல்லா, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்றும், ஜூலை 20-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P